Saturday, May 5, 2012

காப்பியடித்துப்பார்!

காப்பியடித்துப்பார்!

காப்பியடித்துப்பார்.
உன்னைச்சுற்றி
உயிரச்சம் தோன்றும்.
எக்ஸாம் கஷ்டப்படும்.
பேப்பரின் வாசம் விளங்கும்.
உனக்குள் டென்ஷன் வரும்.
கையெழுத்து தடுமாறும்.
சூப்பர்வைஸர் வில்லனாவான்.
உன் தேகம் வளைந்தே
ஜிம்னாஸ்டிக்
தோன்றும்.
கண்ணிரண்டும் முழி தள்ளும்.
காப்பியடித்துப்பார்..
*
தலையினை வளைப்பாய்.
மூன்று முறை மூக்கு உறிஞ்சுவாய்.
காத்திருந்தே
நிமிஷங்கள் நாசம் செய்வாய்.
தந்துவிட்டால்
பத்ற்றத்தில் தோஷம் செய்வாய்.
ஈக்கள் கூட
உன்னை மொய்க்காது. -ஆனால்
இந்த மண்டபமே
உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்.
வயிற்றுக்கும் இடுப்புக்குமாய்
செருகி வந்த பிட் உரசி அரிக்கக்காண்பாய்.
இந்த பேனா
இந்த பென்சில்
இந்த ரூலர்
இந்த ரப்பர் -எல்லாம்
விடைகளைக் குறிகாட்டும்
சமிக்ஞைகளென்பாய்.
காப்பியடித்துப்பார்.
*
விடைகள் இடைக்கிடை
இடம் மாறி இருக்கும்.
நிசப்த மண்டபத்தில்
உனது செயல் மட்டும் பரபரப்பாகும்.
உன் செயலே டவுட்டாகி
உனக்கங்கே வம்பு வரும்.
காப்பியின் பிட்களை
கைகள் சுருட்டும்.
வேர்வை நைல் நதியாய் பெருக்கெடுக்கும்.
முதுகு மேல் ஒட்டும்
பனியனும் பிட்டும்.
தாகத்தால் நா வறண்டு போகும். -பின்பு
தொண்டைக்குழிக்குள்
விக்கல் தொடங்கும்.
காப்பியடித்துப்பார்
*
பிட்களைத் தேடித்தேடியே
தொலைந்து போக உனக்குப் பிரியமா?
அகப்பட்டால் நடப்பதை அறிந்ததுன்டா?
அடிக்கின்ற காப்பியை புரிந்ததுன்டா?
உன்னையே உன்னால்
காட்டிக்கொடுக்க விருப்பமா?
தொடையில் பிட் மறைக்கவும்
பிட்டில் விடை பொறுக்கவும்
உன்னால் ஒண்ணுமா?
அவஸ்தைகள் அடைய வேண்டுமா?
ஐந்தங்குல இடைவெளியில் அயிட்டமிருந்தும்
பார்த்திட முடியாது பொருமியதுண்டா?
காப்பியடித்துப்பார்
*
சின்னச்சின்ன கெட்ஜெட்களால்
சிறுகுறிப்பெழுத முடியுமே
-அதற்காகவேனும்.
புலன்களைக் குறித்தால்
சிக்னல்கல் புரியுமே
-அதற்காகவேனும்.
பேனாவைக் காட்டியும்
பென்சிலைக் காட்டியும்
கீறிட்ட இடைவெளி
நிறப்பிட முடியுமே
-அதற்காகவேனும்.
பார்த்துக்கொண்டே எழுதவும் முடியுமே
எழுதிக்கொண்டே காட்டவும் முடியுமே
-அதற்காகவேனும்
காப்பியடித்துப்பார்
*
சூபர்வைஸர் சட்டை பிடித்தாலும்.
நட்புகள் தலை சொறிந்தாலும்.
முழித்துப் பார்ப்பதால்
உன்னைப்பற்றி உளவு ஆய்ந்தாலும்.
ஒரே ஆணையில்
ஐந்தாண்டு பப்ளிக் பரிட்சைகள்
தடுக்கப்பட்டாலும்.
நீ காப்பியடிக்கும் அவனோ அவளோ
வேறு ஸ்ட்ரீமாய் இருந்து தொலைத்தாலும்
காப்பியடித்துப்பார்

சக்ஸஸ் ஃபெயிலியர்
இரண்டில் ஒன்று
எக்ஸாம் ஹாலிலேயே நிச்சயம்!

(Dedicated to A/L Candidates)




2 comments: