ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி...
வேல்ஸில் உதித்த பெண்ணொருத்தி
வேண்டினாள் மனிதத்தில் அபிவிருத்தி
கண்ணி வெடிக்கெதிராய்
குரல் கொடுத்தாள்
குரல் கொடுத்தாள்
கண்ணீர் வடித்தவர்க்கு
தோள் கொடுத்தாள்
தோள் கொடுத்தாள்
மாளிகை துணிகளை
ஏலமிட்டாள்
ஏலமிட்டாள்
மனித நேயத்துக்கொரு
பாலமிட்டாள்
பாலமிட்டாள்
ராஜ்யத்தின் சாத்திரங்கள்
பூஜ்யம் என அலட்சியப் படுத்தினாள்
சேவையையே சுவாசமென
பூவையவள் இலட்சியப் படுத்தினாள்
புன்னகையை புதையலாய்
தன்னகத்தே கொண்ட இளவரசி
ஆங்கிலத்தில் அவளன்றி
தீங்கிலா அன்புக்கு எவளரசி?
பத்திரிகைகளுக்கு அவள்
ஆயுள் கைதி
பப்பராசிகளுக்கோ 'அவல்'
ஆய்வுச் செய்தி
தொண்ணூற்றேழு ஆவணி
முப்பத்தொன்றில்
புண்ணுற்றே பாரிஸில்
சாலை விபத்தொன்றில்
கடைசியாய் கண்மூடி
விடைபெற்றுச் சென்றாள்
ஜனங்களின் மனசிலே சக்ரவர்த்தினி - ஆனால்
நிஜ வாழ்வில் காற்றிடை மெழுகு வர்த்தி நீ!
No comments:
Post a Comment