Saturday, May 5, 2012

காப்பியடித்துப்பார்!

காப்பியடித்துப்பார்!

காப்பியடித்துப்பார்.
உன்னைச்சுற்றி
உயிரச்சம் தோன்றும்.
எக்ஸாம் கஷ்டப்படும்.
பேப்பரின் வாசம் விளங்கும்.
உனக்குள் டென்ஷன் வரும்.
கையெழுத்து தடுமாறும்.
சூப்பர்வைஸர் வில்லனாவான்.
உன் தேகம் வளைந்தே
ஜிம்னாஸ்டிக்
தோன்றும்.
கண்ணிரண்டும் முழி தள்ளும்.
காப்பியடித்துப்பார்..
*
தலையினை வளைப்பாய்.
மூன்று முறை மூக்கு உறிஞ்சுவாய்.
காத்திருந்தே
நிமிஷங்கள் நாசம் செய்வாய்.
தந்துவிட்டால்
பத்ற்றத்தில் தோஷம் செய்வாய்.
ஈக்கள் கூட
உன்னை மொய்க்காது. -ஆனால்
இந்த மண்டபமே
உன்னையே கவனிப்பதாய் உணர்வாய்.
வயிற்றுக்கும் இடுப்புக்குமாய்
செருகி வந்த பிட் உரசி அரிக்கக்காண்பாய்.
இந்த பேனா
இந்த பென்சில்
இந்த ரூலர்
இந்த ரப்பர் -எல்லாம்
விடைகளைக் குறிகாட்டும்
சமிக்ஞைகளென்பாய்.
காப்பியடித்துப்பார்.
*
விடைகள் இடைக்கிடை
இடம் மாறி இருக்கும்.
நிசப்த மண்டபத்தில்
உனது செயல் மட்டும் பரபரப்பாகும்.
உன் செயலே டவுட்டாகி
உனக்கங்கே வம்பு வரும்.
காப்பியின் பிட்களை
கைகள் சுருட்டும்.
வேர்வை நைல் நதியாய் பெருக்கெடுக்கும்.
முதுகு மேல் ஒட்டும்
பனியனும் பிட்டும்.
தாகத்தால் நா வறண்டு போகும். -பின்பு
தொண்டைக்குழிக்குள்
விக்கல் தொடங்கும்.
காப்பியடித்துப்பார்
*
பிட்களைத் தேடித்தேடியே
தொலைந்து போக உனக்குப் பிரியமா?
அகப்பட்டால் நடப்பதை அறிந்ததுன்டா?
அடிக்கின்ற காப்பியை புரிந்ததுன்டா?
உன்னையே உன்னால்
காட்டிக்கொடுக்க விருப்பமா?
தொடையில் பிட் மறைக்கவும்
பிட்டில் விடை பொறுக்கவும்
உன்னால் ஒண்ணுமா?
அவஸ்தைகள் அடைய வேண்டுமா?
ஐந்தங்குல இடைவெளியில் அயிட்டமிருந்தும்
பார்த்திட முடியாது பொருமியதுண்டா?
காப்பியடித்துப்பார்
*
சின்னச்சின்ன கெட்ஜெட்களால்
சிறுகுறிப்பெழுத முடியுமே
-அதற்காகவேனும்.
புலன்களைக் குறித்தால்
சிக்னல்கல் புரியுமே
-அதற்காகவேனும்.
பேனாவைக் காட்டியும்
பென்சிலைக் காட்டியும்
கீறிட்ட இடைவெளி
நிறப்பிட முடியுமே
-அதற்காகவேனும்.
பார்த்துக்கொண்டே எழுதவும் முடியுமே
எழுதிக்கொண்டே காட்டவும் முடியுமே
-அதற்காகவேனும்
காப்பியடித்துப்பார்
*
சூபர்வைஸர் சட்டை பிடித்தாலும்.
நட்புகள் தலை சொறிந்தாலும்.
முழித்துப் பார்ப்பதால்
உன்னைப்பற்றி உளவு ஆய்ந்தாலும்.
ஒரே ஆணையில்
ஐந்தாண்டு பப்ளிக் பரிட்சைகள்
தடுக்கப்பட்டாலும்.
நீ காப்பியடிக்கும் அவனோ அவளோ
வேறு ஸ்ட்ரீமாய் இருந்து தொலைத்தாலும்
காப்பியடித்துப்பார்

சக்ஸஸ் ஃபெயிலியர்
இரண்டில் ஒன்று
எக்ஸாம் ஹாலிலேயே நிச்சயம்!

(Dedicated to A/L Candidates)




Friday, May 4, 2012

E=mc2


E=mc2

Having surveyed 
the landscape of savannah 
Moving towards 
the faraway mounts....

Zig.... 
....Zag 
Zig.... 
....Zag 
Zig.... 
....Zag

The desperate journey 
of a straw-colored butterfly 
driven towards 
a specific destination...

Coincidentally faced with 
a chaotic crossing 
of a speedy giant: 
an express train
traveling east 
at 120 km/h...

Zigzagging now 
through
the wide-opened windows...

Thus, 
within a fraction 
of  a micro-second 
Distance of Ages 
has been voyaged...






E=mc2


சமவெளிகள் தாண்டிய

மலைச்சரிவு நோக்கிப் புறப்பட்ட

வைக்கோல் நிறத்து வண்ணத்துப்பூச்சியின்

அலை கோட்டுப் பயணத்தில்

சகநிகழ்வாய்க் குறுக்கிட்ட

ஓடும் கடுகதி ரயிலின்

திறந்த ஜன்னல் வழி நுழைந்து

மறுபுறத்து ஜன்னல் வழி வெளியேறியதான

நுண்கணப்பொழுதில்

யுகங்களின் தொலைவு

கடந்துவிடப்பட்டிருந்தது





Wednesday, May 2, 2012

Ode to her, C/o Platform


Ode to her, C/o Platform

I've always been a passerby 
using the sidewalk
which falls along the road
from St. Anthony's 
to the Old British bridge
since my weekend classes began..

I've never seen her alone:
one or two stray puppies are
always with her
(especially the blonde one
which has a wound
in its left paw)

I've never been able 
to throw anything at her,
at least the two rupee coin

inscribed in 
all three national languages:
'Year 2000- Shelter for All!'

And now
I also feel
that I owe her something..
'cause the readers may say
this is a poem...




தெரு மகள் வாழ்த்து 

வார இறுதி வகுப்புகள் துவங்கிய நாள் முதலாய் 
பழைய பிரிட்டிஷ் பாலத்திலிருந்து  
புனித அந்தோணியார் வரை தொடரும் 
அந்த நடை பாதையின் 
வழிப்போக்கனாய் இருந்து வருகிறேன்..

அவள் தனித்திருக்க நான் கண்டதேயில்லை 
ஒன்றிரண்டு தெரு நாய்கள் 
எப்போதும் துணையிருக்கும் 
(குறிப்பாக 
இடது முன்னங்கால் ஊனமான 
அந்த செந்நாய்க்குட்டி)  

எப்பொழுதுமே  என்னால் 
எதையுமே அவள் புறமாய் 
எறிய முடிந்ததில்லை, 
தேசிய மொழிகள் மூன்றிலும் 
'2000 ஆம்   வருடம் - யாவருக்கும் புகலிடம்!'
என   பொறிக்கப்பட்ட 
அந்த இரண்டு ரூபா நாணயத்தையேனும்...

இப்பொழுது 
நானும் கூட எதையோ 
அவளுக்கு  கடன் பட்டதாய் உணர்கிறேன்
வாசகர் இதனை 
கவிதையெனக் கருத 
இடமுண்டு  என்பதால்...



Tuesday, May 1, 2012

Revolt!

Revolt!

Sat on a cable
with a few
a humble crow 
aimin' at the stew
of a vendor's,
that drew
the gland in which
hunger blew.
The vendor noticed;
'Shew.. shew..':
he then shouted.
The bird did slew,
 but to the next.
Now up grew
wrath at its best
'You screw!':
he now grumbled;
went askew;
picked up a brick;
and he threw
BANG on target.
As it flew
he was pleased.
But.. phew!
Now it's back
with a crew
'cause of the whistle
one blew!